கேரள மாநிலத்தில் குழந்தைக்குப் பெயர் வைப்பதில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அம்மாநில உயர் நீதிமன்றமே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைக்குப் பெயர் சூட்டியது.
குழந்தைக்கு புன்யா நாயர் என்று பெயர் வைக்க தாயும், பத்மா நாயர் என்று பெயர் வைக்க தந்தையும் முடிவு செய்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இருவருக்கு இடையேயான தகராறை தீர்ப்பதற்கு காலதாமதம் ஆகும் என்பதாலும், பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாமல் இருப்பது குழந்தையின் நலனைப் பாதிக்கும் என்பதாலும் பெற்றோரின் உரிமையை கருத்தில் கொள்ளாமல் குழந்தைக்கு புன்யா பாலகங்காதரன் நாயர் என்று பெயர் சூட்டப்பட்டது.