செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாலையோரம் சென்றவரை அடிச்சி தூக்கிய தொழில் அதிபருக்கு அரைமணி நேரத்தில் ஜாமீன்..! அடக்கம் செய்ய கூட காசில்லை என கண்ணீர்

Sep 29, 2023 08:01:58 AM

சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் அதிவேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் மோதி ஏழை கூலித்தொழிலாளி உயிரிழந்த நிலையில், சாலையில் நடந்து சென்ற மற்றொரு முதியவர் பலத்த காயமடைந்தார். இவர்களை காரால் அடித்து தூக்கியதாக கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் அரை மணி நேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து ஜாமீனில் சென்றார். 

அய்யா, அவர அடக்கம் பண்ணக்கூட காசில்லைங்க என்று தொழிலாளியின் மனைவியை கண்ணீர் விட்டு கதறவைத்திருக்கும், கீழ்ப்பாக்கம் கார் விபத்துக்காட்சிகள் தான் இவை..!

சென்னை புரசைவாக்கத்திலிருந்து, அழகப்பா ரோடு வழியாக அதிவேகத்தில் சென்ற ஹூண்டாய் ஐ டென் கிராண்ட் என்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

அந்த கார் ஒரு இருசக்கரவாகனத்தை தட்டி பறக்கவிட்ட நிலையில் , சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி பழனி, பேண்ட் சட்டை அணிந்த 71 வயது முதியவர் உள்ளிட்ட 2 பேரை அடுத்தடுத்து அடித்து தூக்கிவிட்டு , சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இரு சக்கரவாகனங்கள் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பெயிண்டிங் தொழிலாளி பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் எதிர்புறம் சாலையில் வேடிக்கை பார்த்தபடியே நடந்து வந்த 71 வயது முதியவர் யஷ்வந்தும், ஆட்டோவில் இருந்தவரும் இதில் பலத்த காயம் அடைந்தனர்.

அருகிலிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நின்றிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உட்பட 4 வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்தது.

அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பழனியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது கணவர், மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற போது விபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும், தனது கணவரின் உடலை அடக்கம் செய்வதற்கு கூட தன்னிடம் பணமில்லை எனக்கூறி உயிரிழந்த தொழிலாளி பழனியின் மனைவி மகேஷ்வரி கதறி அழுதார்.

விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியவர் புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையை சேர்ந்த தொழில் அதிபர் ஜெயகுமார் என்பதும், இவர் சவுகார்ப்பேட்டையில் கெமிக்கல் தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

ஆட்டோமெடிக் கியர் காரை ஓட்டிவந்த ஜெயக்குமார், வீட்டிற்கு செல்வதற்காக காரில் சென்ற போது பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து இந்த கோர விபத்தை நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

L போர்டு ஒட்டிய காரை பயன்படுத்தியது குறித்து கேட்ட போது , தான் ஓட்டுனர் உரிமம் வைத்து இருப்பதாகவும், தனது மகள் மற்றும் மனைவியும் இந்த காரை இயக்குவதால் L போர்டு ஒட்டி இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஜெயகுமாரை கைது செய்த போலீசார் அரைமணி நேரத்தில் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் வகையில் அவர் மது போதையில் இல்லை, கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்து என்ற போக்குவரத்து போலீசார் , பொதுவாகவே போக்குவரத்து காவல் சட்டங்கள் கடுமையாக இல்லை என்று சுட்டிக்காட்டினர்.

அதேநேரத்தில் விபத்தில் சிக்கியவர்கள் பிளாட்பாரத்தில் நடக்காமல் சாலையில் நடந்து சென்றதும், பாதசாரிகள் நடப்பதற்காக அமைக்கப்பட்ட பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளும் , அதனை அகற்றாத மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தனமும் இந்த உயிரிழப்பிற்கு காரணாமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.


Advertisement
கார் பந்தயத்துக்கு ரூ. 42 கோடி செலவு செய்வது வீண்.. மழை பாதிப்புகளுக்கு நடுவே கார் பந்தயம் அவசியமா? : இ.பி.எஸ் கேள்வி
சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!
மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை - அமைச்சர் மா.சு
டிச.3, 4ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கொளத்தூரில் 27 இடங்களில் தேங்கிய மழை நீர் 24 மணி நேரத்தில் அகற்றம்: அமைச்சர் சேகர்பாபு
மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி மீட்புப் பணிக்கு பயிற்சி பெற்ற 18,000 காவலர் மற்றும் கமாண்டோ படையினர் தயார்
சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்
மாமல்லபுரம் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் தலைமையிலான குழுவினருக்கு உற்சாக வரவேற்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய புயலுக்கு மிக்ஜௌம் என பெயர் சூட்டல்
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement