மின்கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி முடக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
430 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், பீக்ஹவர்ஸ் என்று காலை மற்றும் மாலையில் 6 மணி முதல் 10 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கூடுதலாக 20 சதவீதம் வசூல் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போராட்டம் நடைபெற்றது.
குறு சிறு நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் செலுத்தக் கூடிய மின்பிரிவின் கீழ் தான் கட்டாயமாக மின்சாரம் வழங்குவதாக திருச்சி மாவட்ட சிறுகுறு தொழில்கள் சங்கத்தினர் குற்றச்சாட்டி உள்ளனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மின்சாரம் மற்றும் இதர கட்டணங்களை உயர்த்துவதை தவிர்க்க வேண்டுமென தொழில்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
தொழில்துறையினரின் மாநிலம் தழுவிய போராட்டத்தினால், சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு உற்பத்தி இழப்பும், சுமார் மூன்று கோடி பேருக்கு வேலை பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.