செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வீடு புகுந்து கணவனையும் மாமியாரையும் அடித்து வெளியே ஓடவிட்ட மருமகள்..!

Sep 23, 2023 07:38:00 AM

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் 2 வது திருமணம் செய்த கணவரையும், அவதூறாக பேசிய மாமியாரையும் வீடுபுகுந்து மருமகள் புரட்டி எடுத்த சம்பவம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரங்கேறி உள்ளது


திருமணம் செஞ்சி 2 வருஷம் குடித்தனம் நடத்துவாராம் .... அப்புறம் அம்மாவீட்டுக்கு அனுப்பிட்டு வெளி நாடு போய்விடுவாராம்...!

2 வருஷம் கழிச்சி வந்து... நடத்தையை பற்றி அவதூறா பேசுவாராம்... தட்டிக்கேட்டா தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு 2 வது திருமணம் செஞ்சிக்குவாராம்....இது எந்த ஊர் நியாயமுன்னு கேட்டு கணவனை ஓடவிட்ட காட்சிகள் தான் இவை..!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல், ஆறகளூர் கிராமத்தை சேர்ந்த கருணைக்கடல் என்பவரின் மகன் செந்தில்குமாருக்கும், ஆத்தூர் நேரு நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் அபிராமிக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளில் மனைவி அபிராமியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த செந்தில்குமார் வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார். 2018 ஆம் ஆண்டு ஊர் திரும்பிய செந்தில்குமார், மனைவியை அழைத்துச்சென்று தனிக்குடித்தனம் சென்றதாகவும், கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனைவியை மீண்டும் தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு செந்தில்குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இருவருக்குமிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்த லாவண்யா என்ற பெண்ணை 2 வதாக திருமணம் செய்து கொண்டு செந்தில்குமார் குடும்பம் நடத்துவதாக மனைவி அபிராமிக்கு தெரியவந்ததால் கணவர் வீட்டுக்குள் புகுந்து ருத்ர தாண்டவமாடினார்

வீட்டுக்குள் இருந்த 2 வது மனைவியை பிடித்து நாலு சாத்து சாத்திய நிலையில், தனது நடத்தை குறித்து அவதூறாக பேசிய மாமியாரையும் புரட்டி எடுத்தார்

தடுக்க வந்த கணவர் செந்தில்குமாருக்கும் சில பல அடிகள் விழுந்ததால், அடி தாங்காமல் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்று 6 வருசமாக எங்கே போயிருந்தாய் ? என்று சவுண்டு விடும் சங்கடமான நிலை ஏற்பட்டது

நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போதே உனக்கு இன்னோரு பொண்ணு கேட்குதா என்று அபிராமி ஆவேசமான நிலையில் தனது 2 வது மனைவியை வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண் என்று சமாளித்தார் அப்படி இருந்தும் அபிராமியின் ஆவேசம் குறையவில்லை

மனைவியின் உறவினர்களும் வீட்டிற்குள் புகுந்து நியாயம் கேட்டதால் மாப்பிள்ளை செந்தில்குமார் பதற்றமானார்

மாமியார் மற்றும் கணவர் மீதுள்ள ஆத்திரத்தை எல்லாம் அடியாக இறக்கிய அபிராமி ஒரு கட்டத்தில் சாந்தம் அடைந்து வீட்டு வாசலில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வெளியே வந்தால் மீண்டும் அடிவிழுமோ என்ற அச்சத்தில் செந்தில்குமார் குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்தனர், தகவல் அறிந்து வந்த போலீசார், வீடுபுகுந்து தாக்குதல் மற்றும் சட்டவிரோத திருமணம் என இருதரப்பு புகார்களை பெற்று விசாரித்து வருகின்றனர்.


Advertisement
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
கடலூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்
திண்டுக்கலில் பிரிந்து வாழும் மனைவி மற்றொரு ஆணுடன் டூவீலரில் பயணித்த போது காரை விட்டு மோதிய கணவர் கைது
திருவண்ணாமலை அருகே அரசு அனுமதியில்லாத மதுபாரில் ஏற்பட்ட தகராறில் ஜேசிபி ஆபரேட்டர் பீர் பாட்டிலால் குத்தி கொலை
பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
திருவாரூர் புஸ்வானம் வெடித்ததில் காயமடைந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம்

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement