செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சென்னை கால் டாக்சி ஓட்டுநரின் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9000 கோடி... 30 நிமிடங்களில் பணத்தை திருப்பி எடுத்த மெர்கெண்டைல் வங்கி

Sep 21, 2023 06:32:35 PM

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தனது கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாயை திடீரென வரவு வைத்தாக கால் டாக்ஸி ஓட்டுனர் ஒருவர் கூறியுள்ளார்.

சென்னையில் ஊபர் கால் டாக்ஸி ஓட்டி வரும் பழனியை அடுத்த நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற அந்நபர், தமது செல்ஃபோனுக்கு கடந்த 9 ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும், அதில் தமது வங்கிக் கணக்கில் 9 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தமது வங்கிக் கணக்கில் 105 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், ஏமாற்றுப் பேர்வழிகள் யாரோ குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்களோ எனற முதலில் சந்தேகப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் தமது நண்பருக்கு முதலில் ஆயிரம் ரூபாயையும், பின்னர் அடுத்தடுத்து 2 முறை 10 ஆயிரம் ரூபாயும் அனுப்பிப் பார்த்துள்ளார்.

அந்தத் தொகை நண்பருக்கு சென்ற பிறகே தமது கணக்கில் பணம் வந்திருப்பதை உறுதி செய்து கொண்டதாக தெரிவித்துள்ள ஓட்டுநர் ராஜ்குமார், தாம் 21 ஆயிரம்  எடுத்த சிறிது நேரத்தில் தமது கணக்கில் இருந்த பணத்தை வங்கி நிர்வாகம் திருப்பி எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு பேசி ஒரு தரப்பினர், 21,000 ரூபாயை திருப்பித் தர வேண்டாம் என்று கூறிய நிலையில், மற்றொருவர் தம்மை தொடர்பு கொண்டு தம்மை சிறையில் தள்ளப் போவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

பணத்தை திருப்பித் தருவதற்காக தி.நகர் கிளையை அணுகிய போது, அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுமாறும், தேவைப்பட்டால் புது டாக்ஸி வாங்க கடன் கொடுக்கத் தயார் என்றும் வங்கி ஊழியர்கள் கூறியதாக ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement
நட்சத்திர விடுதியில் பணியாற்றும் வடமாநில பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை.. பெண் குற்றச்சாட்டு
மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!
பல ஆண்டுகால உழைப்பில் வாங்கிய பொருட்கள் சேதம்.. பாடபுத்தகங்கள் நனைந்துவிட்டதால் செய்வதறியாது தவிக்கும் மாணவர்கள்
9 மாதம் முதல் 15 வயதினர் வரை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியம்
ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவ இடத்தில் இருந்த காவலர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த திட்டம்
துன்பத்தை தருபவர்களை ஏன் அடுத்தடுத்து தேர்வு செய்கிறார்கள் - சீமான் விமர்சனம்
இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்
தென்சென்னையில் துப்புரவு பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் மெய்யநாதன்
மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியிருக்கும் கழிவுகள்.. கடும் அவதியில் சென்னை வாசிகள்
மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement