செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வினை தீர்ப்பான் விநாயகர்..! விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலம்..!

Sep 18, 2023 11:25:38 AM

முழுமுதலோன் விநாயகர் பெருமானின் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சுண்டல் கொழுக்கட்டை, மலர்கள் உள்ளிட்டவற்றை படையலிட்டு வழிபடும் மக்கள், இனி நடக்கப்போகும் நாட்கள் நல்லதாக நடக்க வினை தீர்க்கும் விநாயகரை வேண்டி கொள்கின்றனர்.

 

ஆனை முகக்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தியாகும். விநாயகர் ஓம்காரம் என பிரணவ மந்திரத்தின் வடிவமானவர் என்பதே அவரது உருவத்தத்துவமாகும்.

வரிசையாக அடுத்தடுத்த மாதங்களில் வர உள்ள இந்துக்களின் விசேஷ நாட்களுக்கும் பண்டிகைகளுக்கும் பிள்ளையார் சுழி புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் தொடங்குகிறது.

குழந்தை உடலில் யானையின் தலையுடன் காட்சியளிக்கும் விசித்திரமான தெய்வம் விநாயகர். வினை தீர்க்கும் விநாயகரை வணங்கினால் அனைத்திலும் வெற்றி என்பது ஐதீகம். பயணத்தில் வழித்துணைக்கும் விநாயகர். வணிகர்கள் புதிய கணக்குத் தொடங்கவும் விநாயகர் , திருமணம் நடக்க விநாயகர் வினைகள் தீர்க்கும் விநாயகர் கடன் தீர்க்கும் விநாயகர் , சனிபகவான் அருள் பெற விநாயகர் என்று எண்ணற்ற காரியங்களுக்கு விநாயகரை முழு முதல் தெய்வமாக வணங்குகின்றனர் பக்தர்கள்...

முருகப்பெருமான் மாங்கனிக்காக உலகை சுற்றி வந்த போது தாய் தந்தையே உலகம் என்று ஈசனையும் உமையையும் சுற்றி வந்து மாங்கனியைப் பெற்ற விநாயகரின் குறும்பும் புகழும் உலகறிந்தது.

வட மாநிலங்களில் குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் காக்கும் கடவுளாக உள்ள விநாயகரின் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலைகள் 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது. பிள்ளையார்ப்பட்டி, திருச்சி மலைக்கோட்டை, புதுச்சேரி மணக்குள விநாயகர் உள்ளிட்ட விநாயகர் ஆலயங்களிலும் புகழ்மிக்க சைவ ஆலயங்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் ஆரத்திகள் நடைபெறுகின்றன.


Advertisement
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பயன்படுத்த உள்ள புனித நீர் காரைக்காலில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் அனுப்பி வைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
பஞ்சாப் குருநானக்கின் 555ஆவது பிறந்த நாள் சீக்கியர்கள் கொண்டாட்டம்
சபரிமலை பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு-சாமி தரிசனம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
திருப்பதியில் ஏழுமலையானுக்கும், பத்மாவதி தாயாருக்கும் ஒரேநாளில் 10 டன் மலர்கள் மூலம் இரு கோவில்களிலும் புஷ்பயாகம்
திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா நேரலை
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா தொடக்கம்
கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தூத்துக்குடியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உறவினர்களின் கல்லறைகளை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை
காமாட்சி அம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தங்கத்தேர் உற்சவம்

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement