கோவை செட்டிபாளையத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்ட கணவன் வெட்டிக் கொல்லப்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த், செட்டிபாளையத்தை சேர்ந்த தன்யா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 5-ஆம் தேதி தன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது வீட்டிற்குச் சென்ற பிரசாந்தை தன்யாவின் உறவினரான விக்னேஷ் வெட்டிக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து தன்யா விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். இரு தினங்களுக்குப் பின் தன்யா வீடு திரும்பினார். இந்நிலையில் தன்யா நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், தன்யா வீட்டுக்குத் தெரியாமல் பிரசாந்தை திருமணம் செய்து கொண்டதாகவும், பிரசாந்த் கொல்லப்பட்டதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்ததாக போலீசார் கூறினர். தன்யாவின் வீட்டினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.