செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

திட்டமிட்டபடி மேட்டூர் அணை 12-ஆம் தேதி திறக்கப்படும் - முதலமைச்சர் உறுதி

Jun 09, 2023 04:18:00 PM

காவிரி பாசன மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் 96 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதால் மேட்டூர் அணை திட்டமிட்டப்படி வரும் 12 ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாயர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் கர்நாடகா அணைக் கட்டுவதை தடுப்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக கூறினார்.

முன்னதாக, தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் உள்ள முதலை முத்துவாரி மற்றும் விண்ணமங்கலத்தில் உள்ள வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் திருமங்கலம் கிராமத்தில் உள்ள கூழையாறு வடிகால், இருதயபுரம் மற்றும் வெள்ளனூரில் நந்தியாறு வடிகாலில் மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட இடங்களில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளின் புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை முதலமைச்சர் பார்த்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

ஆய்வுக்கு இடையே முதலமைச்சர் ஆங்காங்கே பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். தஞ்சை மாவட்டம் ஆலக்குடியில் சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு ஆட்டுக்குட்டி பரிசளித்தார். திருச்சி மாவட்டம் செங்கரையூர் கிராமத்தில் முதலமைச்சரிடம் தங்கள் கிராமத்துக்குப் பேருந்து வசதியில்லை என பெண்கள் முறையிட்டனர்.

இந்த ஆய்வுகளின் போது அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.


Advertisement
தனியார் பேருந்து ஓட்டுநர் மீது 20 இளைஞர்கள் கொடூர தாக்குதல்.. ஓட்டுநரை தாக்க காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை
மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது
கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி
சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!
தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!
உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து
தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்
ஒரு கண்டன அறிக்கை போதும் கே.ஜி.எப் வெளியாகி இருக்குமா ? தம்பிகளுக்காக சீமான் ஆவேசம்..! அரசியல் கட்சிகளுக்கு அவமானம்
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அக்டோபர் 7ஆம் தேதி வரை அவகாசம் : ஆர்.பி.ஐ.
மாம்பழ ஜூஸ் கம்பெனிகளில் இருந்து கொட்டப்பட்ட ரசாயன மாங்கொட்டைகளால் தண்ணீர் மாசடைந்து உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

Advertisement
Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சாலையை ஒழுங்கா போட சொன்னது எவண்டா..? ஊராட்சி தலைவரின் மிரட்டல்..!

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தானாக பால் சுரந்த பசு... திருச்செந்தூரில் அதிசயம்... பாலைப் பருகி பக்தர்கள் பரவசம்..!

Posted Oct 01, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

Posted Oct 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

உதகை மலையில் இருந்து பேருந்து உருண்டதற்கு காரணம் என்ன.? 8 பேர் பலியான விபரீத விபத்து


Advertisement