தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பயிரிடப்பட்ட 40 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.
காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கோடை மழையால் முள்ளங்கி விளைச்சல் அதிகரித்துள்ளது.
வெளிமாநிலங்களுக்கு முள்ளங்கி ஏற்றுமதி செய்யப்படுவதால் விலையும் அதிகரித்துள்ளது.
விளைநிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள், ஒரு கிலோ முள்ளங்கியை 7 முதல் 9 ரூபாய் வரை வாங்கிச் செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.