கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே மகனுக்குப் பெண் பார்க்க மொபட்டில்சென்ற கணவனும், மனைவியும் சரக்கு வாகனம் மோதி உயிரிழந்தனர்.
மிட்ட அள்ளி பாரத கோயில் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன், பாப்பாத்தி தம்பதியினர் தனது மகன் மணிகண்டனுக்கு பெண் பார்க்க பேரணுடன் மொபட்டில் சென்றனர்.
மணிகண்டன் தனது தங்கையுடன் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டான் கொட்டாய் பிரிவு ரோடு அருகே பச்சையப்பனின் மொபட்டின் மீது பின்பக்கம் அதி வேகத்தில் வந்த சரக்கு வாகனம் ஒன்று மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பச்சையப்பனும், பாப்பாத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். பேரண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.