சென்னை திருவல்லிக்கேணி ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மதுபோதையில் உள்ளே அனுமதிக்குமாறு ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய த்திற்குச் செல்லவேண்டும் எனக்கூறி ஆறு இளைஞர்கள் டிக்கெட் எடுத்து உள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களை பரிசோதனை செய்ததில், ஆறு பேரும் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரயில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்த போலீசார், ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களையும், மெட்ரோ ரயில் நிலைய பணியாளர்கள் சிலரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.