செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

வாடகை ஸ்கூட்டரில் வலம் வந்த மன்மதராசா.. பெண்களை சீண்டியதால் மாவுக்கட்டு..!

May 29, 2023 06:22:24 AM

சென்னையில் வாடகைக்கு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த மேடை பாடகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது சாலையோர பள்ளத்தில் வழக்கி விழுந்து காயமடைந்தவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் 17 வயது சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். வீட்டிற்கு வெளியே நின்றுக் கொண்டிருந்த தங்களது மகளிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே, முகப்பேர், நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் தெருவில் விளையாடும் சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல் சென்று ஒரு நபர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது வாய்மொழியாக ஏராளமானோரிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றதால் தனிப்படை அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

புகார் வரப்பெற்ற பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் பயன்படுத்திய வாகன எண், அரும்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் கடைக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. அங்கு விசாரித்ததில் மர்ம நபர் பெயர் முகப்பேரைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. அவ்வப்போது நாள் வாடகைக்கு 500 ரூபாய் கொடுத்து வாகனத்தை எடுத்துச் செல்வதும் தெரியவந்தது.

பகலில் மேடைகச்சேரிகளில் பாடகராகவும், பகுதி நேர ஓட்டுனராகவும் வேலை செய்து வந்த சரவணன், இரவு நேரங்களில் தனது சேட்டைகளை அரங்கேற்றி வந்துள்ளான். எனவே, கொசு மருந்து அடிப்பவர்கள் போல் மாறுவேடத்தில் அவன் வீட்டுக்குச் சென்ற போலீசார், 3 நாட்கள் நோட்டம் விட்டு, சரவணனை மடக்கிப் பிடித்தனர்.

ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு இதே குற்றத்துக்காக கைதாகி சிறை சென்ற சரவணன், ஜாமீனில் வெளியே வந்து சில காலம் அமைதியாக இருந்துள்ளான். பிறகு மீண்டும் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சரவணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விரட்டியபோது சாலையோர கழிவுநீர் கால்வாயில் விழுந்ததால் இடது கை எலும்பு முறிந்து மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

Advertisement
ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!
செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்
லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?
கல்லூரி வாகனமா ? காதல் வாகனமா? தம்பி உனக்கென்ன வேலை எழுந்திரு..! அக்கறையுடன் எச்சரித்த பெண் எஸ்.ஐ
அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்
புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?
டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்
தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?

Advertisement