சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன், பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினர்களுக்கு தொலைக்காட்சி மூலம் குழந்தையைக் காண்பிக்கும் நடைமுறை வரவேற்பை பெற்றுள்ளது.
பிரசவ வார்டின் வெளியில் டிவி யும், அதன் அருகில் ஸ்ப்பீக்கரும் பொருத்தப்பட்டுள்ளன. கர்ப்பிணியை பிரசவ அறைக்கு அழைத்து செல்வது முதல், குழந்தை பிறந்த உடன் அது ஆணா, பெண்ணா என்றும், எத்தனை கிலோ எடையுடன் பிறந்துள்ளது என்றும் ஒலிப்பெருக்கி மூலம் செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஒரே நேரத்தில் உறவினர்களுக்கு உடனடியாக தாயும், சேயும் நலம் என்ற தகவல் கிடைத்து விடுகிறது. பிறகு குழந்தையை உறவினர் ஒருவரின் கையில் கொடுத்து, வார்டுக்குள் பொருத்தப்பட்டுள்ள கேமரா முன்பு அமரவைக்கின்றனர். அதனை வெளியே உள்ள திரையில் பார்த்து உறவினர் மகிழ்ச்சியடைகின்றனர்.