தொலைபேசி மூலம் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக நடிகர் எஸ்வி சேகர் காவல் துறையில் புகார் செய்தார்.
சென்னை மந்தைவெளியில் வசிக்கும் எஸ்.வி. சேகர், பட்டினப்பாக்கம் காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்தார்.
மர்ம நபர் ஒருவர் தன்னை தொடர்ச்சியாக தெலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவவர்களின் பங்களிப்பு குறித்து ஊடகங்களில் பேசியதால் தனக்கு மிரட்டல் வருவதாகவும் அந்த புகார் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.