செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மதம்மாற்றி திருமணம் செஞ்சிவச்சீங்க..இப்ப அவன் ஓடிப்போயிட்டான்...பள்ளி வாசலில் பெண் தர்ணா..! கைக்குழந்தையுடன் ஜமாத்திடம் நீதி கேட்டார்

Apr 01, 2023 07:13:56 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காதல் கணவன் கைவிட்ட நிலையில், தன்னை மதம் மாற்றி திருமணம் செய்து வைத்த பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் நியாயம் கேட்டு தரையில் அமர்ந்து இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசல் முன்பாக புர்கா அணிந்த பெண் ஒருவர் கையில் பச்சிளம் குழந்தையுடன் நின்றிருந்தார். அவருடன் தந்தை மற்றும் உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். திடீரென பள்ளி வாசல் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த பள்ளி வாசல் நிர்வாகி, அவர்களை வெளியே போகச்சொன்னதும், புர்கா அணிந்த பெண், எனக்கு மதம் மாற்றி திருமணம் செய்து வைத்தது நீங்கள் தானே..? அந்த பையன் ஓடிட்டான், போலீசார் அவர்களுக்கு சாதகமாக பேசுகின்றனர். என் குழந்தைக்கு தந்தை வேண்டும், எனக்கு நீதி வேண்டும் எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவரிடம் விசாரித்த போது மதம் கடந்த காதலால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார் சிதம்பரம் கொத்தங்குடித்தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகளான மகேஸ்வரி , அம்பலத்தாடிமடத் தெருவைச் சேர்ந்த ஆஷிக் என்பவரது மகன் பக்கிம் அஸ்லாமிற்கு சொந்தமான ஐஸ்கிரீம் கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது மகேஸ்வரியை காதலித்த பக்கிம் அஸ்லாம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அத்துமீறியதாக கூறப்படுகிறது.

இதனால் கர்ப்பிணியான மகேஸ்வரியை திருமணம் செய்து கொள்ள பக்கிம் அஸ்லாம் மறுத்துள்ளார். அவரது தந்தை ஆஷிக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என நிபந்தனைவிதித்ததாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து மதம் மாறிய மகேஸ்வரிக்கு, ஆயிஷா என்று புதிதாக பெயர் வைக்கப்பட்டு கடந்த ஜனவரி 1ந்தேதி அன்று இதே பள்ளிவாசலில் வைத்து நிக்கா நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஜனவரி 16ஆம் தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் ஆயிஷாவின் கணவர் பக்கிங் அஸ்லாம் தலைமறைவானதாகவும், தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆயிஷா புகார் அளித்துள்ளார். போலீசார் தனது புகாரை முறையாக விசாரிக்காததால் தன்னை மதம் மாற்றி திருமணம் செய்து வைத்த பள்ளி வாசலில் உள்ள ஜமாத்தாரிடம் நியாயம் கேட்டு வந்திருப்பதாக ஆயிஷா தெரிவித்தார்

சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட மகளிர் போலீசார் அந்தப்பெண்ணிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தனது மகளுக்கு நீதி வேண்டும் என்று அவரது தந்தை சீனிவாசன் தெரிவித்தார்

தொழுகைக்காக வருபவர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்பதால் பள்ளி வாசலின் வாயில் அருகில் அமர்ந்து தர்ணாபோராட்டம் செய்தனர்.

சம்பந்தப்பட்ட இளைஞரை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் உறுதி அளித்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்

தங்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் மதம் மாறிய அந்த பெண்ணும் அவளது குழந்தையும் பள்ளி வாசல் முன்பு தீக்குளிக்கும் என்று அந்தப்பெண்ணின் உறவினர் பகிரங்கமாக கூறிச்சென்றார்


Advertisement
அரிவாளுடன் வீடு புகுந்து வெட்ட முயன்ற இளைஞர்.. பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி.. ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவம்..!
மகாவிஷ்ணு கைது - 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
பெத்த அப்பான்னு பாக்கமாட்டேன்.. வெட்டி போட்டு விடுவேன். கத்தியுடன் காவலர்கள் முன் இளைஞர் மிரட்டல்..!
பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தர ஆசிரியர்கள், மாணவர்கள் பாடல் பாடி முதலமைச்சருக்கு கோரிக்கை..!
கெட்டுப்போன சப்பாத்தியை பார்சல் வழங்கிய உணவகம்.. களத்தில் இறங்கிய உணவு பாதுகாப்பு துறை..!
உரிய அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை.. பூட்டை உடைத்து சிலையை மீட்ட போலீசார்..!
பெட்ரோல் பங்கில் தகராறு.. சட்டக்கல்லூரி மாணவருக்கு வெட்டு - தஞ்சாவூரில் பரபரப்பு சம்பவம்..!
கோவை மாநகரில் போலீஸ் அக்கா" திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் 493 புகார்களில் தீர்வு
மதுரையில் பக்திப் பாடலுக்கு சாமியாடிய மாணவிகள் - மாவட்ட நிர்வாகம் விளக்கம்

Advertisement
Posted Sep 07, 2024 in இந்தியா,Big Stories,

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாட்டம்

Posted Sep 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இன்னுமா திருந்தாம இருக்கீங்க..? பெண்ணாய் பிறந்ததை தவிர அந்த பிஞ்சு செய்த பாவமென்ன ? பச்சிளம் பெண் குழந்தை கொலை பின்னணி

Posted Sep 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இங்க யாருக்கு இடி விழபோகுதோ.. சாமியாடிய அரசு பள்ளி மாணவிகள் அடக்க இயலா கலக்கத்தில் ஆசிரியர்கள்..!

Posted Sep 07, 2024 in வீடியோ,Big Stories,

மோட்டிவேசனல் பேச்சால் பள்ளியில் உண்டான களேபரம்.. அரசு பள்ளி H.M டிரான்ஸ்பர் - பாவம் மிஸ்டர் பரம்பொருள்..!

Posted Sep 06, 2024 in Big Stories,

லியோவை முந்தியதா G.O.A.T..?..இந்தியாவில் மட்டும் ரூ 43 கோடி.. ரூ 126 கோடியை எட்டியது வசூல் - அஜித் ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம்?


Advertisement