செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

இன்ஸ்டா காதல் இம்சை ரவுடி.. பேபி டீச்சரக்காவை போலீஸ் தேடுகின்றதாம்..! ராணுவ வீரரையே வீழ்த்திட்டாராம்.!

Mar 25, 2023 06:26:14 PM

இண்டாகிராம் மூலம் மும்பை தமிழருடன் காதல் மொழி பேசி, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் ஸ்கோடா கார் போன்றவற்றை ஏமாற்றி பறித்ததாக கோவையை சேர்ந்த கேடி ஆசிரியை ஒருவர் மீது வழக்கு பதிந்துள்ள போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்..

ஐ எம் சிங்கிள் என்று இன்ஸ்டா கிராமில் அறிமுகமாகி மும்பை தமிழருக்கு அல்வா கொடுத்த ரவுடி பேபி டீச்சரக்கா ஹசல் ஜேம்ஸ் இவர் தான்..!

மும்பை செம்பூரில் வசிக்கும் டிராவல்ஸ் அதிபரின் மகன் ராஜேஸ் . இவர் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் தனது இன்ஸ்டாகிராம் தோழி லோரன் மூலம் அவரது சகோதரி ஹசல் ஜேம்ஸ் அறிமுகமானதாக கூறி உள்ளார்.

தனக்கு திருமணமாகவில்லை என்று கூறியதை நம்பி ராஜேஷ் காதலில் விழுந்துள்ளார். பின்னர் கணவர் இறந்து விட்டதாக கூறிய ஹசல், ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்து வாழ்வதாகவும் தனக்கு 2 குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களுடன் கஷ்டபடுவதாகவும் உருக்கமாக பேசி உள்ளார். திருமணம் செய்து கொள்ள போகிற பெண் தானே என்று ராஜேஷ் முதலில் 90 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி துணி மற்றும் அழகு சாதன பொருட்கள் ஸ்கோடா கார் என 20 லட்சம் ரூபாய்க்கு பல்வேறு பொருட்களை ராஜேஷிடம் இருந்து ஹசல் ஏமாற்றி வாங்கியதாகவும், அனைத்தையும் பெற்றுக் கொண்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

தான் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்ட போது உனக்கு 20 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கு பதில் கூலிப்படையினரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் உன்னை தீர்த்துக் கட்டி விடுவார்கள் என்று ஹசல் மிரட்டியதாகவும், ஹசல் தற்போது வேறு ஒருவருடன் பழக்கத்தில் இருப்பதாகவும், ஹசலின் இந்த மோசடிக்கு அவரது சகோதரர், தந்தை என குடும்பமே உடந்தையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்த புகார் தொடர்பாக போத்தனூர் போலீசார் விசாரித்தனர். கோவை காவல் அதிகாரி ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹசலுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில் காதல் கணவரை மதம் மாறச்சொன்னதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதும், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருவதும் தெரியவந்தது.

ராஜேஸிடம் இருந்து ஹசல், தனது தந்தையின் வங்கி கணக்கில் மோசடியாக பணம் பெற்றதும், சகோதரர் பெயரில் ஸ்கோடா கார் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இண்ஸ்டா காதல் இம்சை அழகி ஹசல் ஜேம்ஸ், அவரது குடும்பத்தினர் மீது மோசடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போத்தனூர் போலீசார் தலைமறைவான ஹசலை தேடிவருவதாக கூறினர்.


Advertisement
கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்த வந்தவர்கள் இடையே மோதல், அடிதடி - 9 பேர் படுகாயம்
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து
ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்
இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!
தண்டவாளத்தில் வைக்கப்பட்ட லாரி டயர்கள்.. ரயிலின் வேகத்தை குறைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு..!
பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!
கோடை மழையால் தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி அமோக விளைச்சல்..... வியாபாரிகள் நேரடி கொள்முதல் செய்வதால் விலை அதிகரித்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி...!
மகனுக்குப் பெண் பார்க்க சென்ற கணவன், மனைவி சாலை விபத்தில் பரிதாப பலி....!
திருவாரூர் வெண்ணாற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளால் குறுவை, சம்பா சாகுபடி பணிகள் பாதிப்பு....!
தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement