அரியலூரில் சாலையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு டூவீலர் மோதிய விபத்தில் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ராஜேஷ் உயிரிழந்தார்.
ராஜேஸ் தனது நண்பர் முத்தமிழ்செல்வனின் டூவீலரில் பின்னால் அமர்ந்து பொய்யூர் அருகே மேலக்கருப்பூர் பிரிவு சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது பெண்ணுடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சாலையின் இடது ஓரத்திலிருந்து உமாபதி என்பவர் சாலையை கடப்பதற்காக வலதுபுறம் திரும்பினார்.
இதனால், கட்டுப்பாட்டை இழந்த முத்தமிழ்செல்வனின் டூவீலர் மோதியதில், 4 பேரும் தூக்கி வீசப்பட்டு ராஜேஷ் அதே இடத்தில் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.