சென்னை கோயம்பேட்டில் பட்டாக்கத்தியுடன் சென்று தகராறில் ஈடுபட்ட இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஞாயிறன்று இரவு ஒரு கும்பல் பட்டாகத்திகளுடன் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு மார்க்கெட்டில் ஓடியதால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பட்டாகத்தியுடன் ஓடிய சென்னை பாடிகுப்பம் பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவரை இன்று அதிகாலையில் கைது செய்து, கோயம்பேடு காவல்நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.