செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உயிரோடு இருக்கும் நடிகர் கோட்டா சீனிவாச ராவுக்கு அஞ்சலி செலுத்திய நெட்டிசன்ஸ்..! பாதுகாப்புக்கு சென்ற போலீசார்

Mar 22, 2023 08:28:03 AM

சாமி, திருப்பாச்சி படங்களில் நடித்த வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல் நிலைகுறித்து சமூக வலைதளங்களில் பரவிய தவறான செய்தியை உண்மை என நம்பி, இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வீட்டில் அவர் உயிரோடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறி உள்ளது...

ஹரி இயக்கத்தில் விக்ரமின் சாமி படத்தில் பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர் தெலுங்கு வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த கோட்டா சீனிவாசராவுக்கு, தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கோட்டா சீனிவாச ராவ் குறித்து ஆந்திராவில் உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான செய்தி ஒன்று பரவியது. இதனை உண்மை என்று நம்பி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக வேனில் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் அவரை கண்டதும் இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அதிர்ந்தனர். இதுபோன்று செய்தி அறிந்து வந்ததாக கூறி திரும்பிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு பல்வேறு உறவினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததால் நொந்து போன கோட்டா சீனிவாசராவ், இது குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அனைவருக்கும் உகாதி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு தான் இறந்து விட்டதாக வந்த செய்தி வதந்தி என அவர் கூறி உள்ளார்.


Advertisement
"தடம் புரண்டது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்.." ஒடிசாவில் கோர விபத்து..!
பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!
500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?
தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!
தோனிக்கு வெற்றிகரமாக முடிந்த முழங்காலில் அறுவை சிகிச்சை... வலிகளுக்கு நடுவே நனவான கோப்பை கனவு!
கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!
மேகதாது அணை விவகாரம்: டி.கே. சிவகுமாருக்கு இபிஎஸ் கண்டனம்..!
இத்தாலியில் பென்சன் பணத்திற்கு ஆசைப்பட்டு தாயின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன் கைது..!
காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணை கொலை செய்த கணவன் உள்பட 3 பேர் கைது..!
8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement