செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உயிரோடு இருக்கும் நடிகர் கோட்டா சீனிவாச ராவுக்கு அஞ்சலி செலுத்திய நெட்டிசன்ஸ்..! பாதுகாப்புக்கு சென்ற போலீசார்

Mar 22, 2023 08:28:03 AM

சாமி, திருப்பாச்சி படங்களில் நடித்த வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ் உடல் நிலைகுறித்து சமூக வலைதளங்களில் பரவிய தவறான செய்தியை உண்மை என நம்பி, இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வீட்டில் அவர் உயிரோடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சம்பவம் ஐதராபாத்தில் அரங்கேறி உள்ளது...

ஹரி இயக்கத்தில் விக்ரமின் சாமி படத்தில் பெருமாள் பிச்சை கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர் தெலுங்கு வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசராவ்.

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த கோட்டா சீனிவாசராவுக்கு, தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கோட்டா சீனிவாச ராவ் குறித்து ஆந்திராவில் உள்ள வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான செய்தி ஒன்று பரவியது. இதனை உண்மை என்று நம்பி ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்காக வேனில் அவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். வீட்டில் அவரை கண்டதும் இறுதி சடங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் அதிர்ந்தனர். இதுபோன்று செய்தி அறிந்து வந்ததாக கூறி திரும்பிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து அவருக்கு பல்வேறு உறவினர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததால் நொந்து போன கோட்டா சீனிவாசராவ், இது குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அனைவருக்கும் உகாதி வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு தான் இறந்து விட்டதாக வந்த செய்தி வதந்தி என அவர் கூறி உள்ளார்.


Advertisement
தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!
அபுதாபியில் இன்று நடக்கிறது சர்வதேச இந்திய திரைப்பட விழா.... நடிகர் கமல்ஹாசனுக்கு சாதனையாளர் விருது
இன்று டி.எம்.எஸ். நினைவு நாள்....!
கேரளா ஸ்டோரிக்கான தடை அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் - நடிகை கங்கனா ரணாவத்.!
நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்
செந்தாழம் பூவில்... வந்தாடிய தென்றல்... சரத்பாபு காலமானார்..!
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானார்
IIFA திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு திரைப்பட வாழ்நாள் சாதனையாளர் விருது..!
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு மேற்குவங்க அரசு விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
கேக்கிறான், மேய்க்கிறான் நடிகையை ஏய்த்தது யார்? தீருமா பஞ்சாயத்து..?

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அப்படியே வாழ்த்திட்டாலும்... முதல்ல ஒழுங்கா படிப்போம், அப்புறமா பேனர் அடிப்போம்... பந்திக்கு.. பந்து..! கடலைக்கு.. கல்லை..!


Advertisement