செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!

Mar 21, 2023 03:06:20 PM

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் மகளிர் கமாண்டோ காவல் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவல் துறையில் மகளிர் பணியமர்த்தபட்டு 50ஆண்டுகால பொன்விழா கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மெய்காப்பாளராகவும் பெண்கள் கமாண்டோ படையினர் பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனி பாதுகாப்பு பிரிவில் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி தலைமையிலான பெண் கமாண்டோ படையினர், சஃபாரி ஷூட்டுடன் கூலர்ஸ் அணிந்து கெத்தாக இந்த பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்படும் நொடி முதல் அவர் மீண்டும் வீடு திரும்பும் வரை பெண்கள் கமாண்டோ படை ஆண் கமாண்டோக்களின் அதே சுறுசுறுப்புடன் கவனமாக இந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். இந்த கமாண்டோ படையில் 9 பெண் கமாண்டோ வீராங்கனைகள் இடம் பெற்று உள்ளனர்.

பெண் கமாண்டோக்களுக்கு தினமும் உயர் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு நடைமுறை, சிலம்பம் தற்காப்பு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆயுதப் பயிற்சி, கை துப்பாக்கி, ஏகே-47உள்ளிட்ட உயரக துப்பாக்கிகளின் பயிற்சிகளை பெற்றுள்ளனர். வெடிகுண்டுகளை கையாள்வது, அவற்றை செயலிழக்கச் செய்வது, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பிரித்து மீண்டும் இணைப்பது என பல்வேறு திறன்களையும் இந்த பெண் கமாண்டோ படையினர் ஒருங்கே பெற்றுள்ளனர்.

தமிழக வரலாற்றில் முதன் முதலாக முதலமைச்சர் தனி பாதுகாப்பு பிரிவில் இதுபோன்ற பெண்கள் கமாண்டோ சிறப்பு படை அமைக்கப்பட்டு சஃபாரி உடை மற்றும் தனிச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சிங்கத்தை தலையில் வைக்கும் ஒரு வாய்ப்பு தனக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக உதவி ஆய்வாளர் தனுஷ் கண்ணகி மகிழ்ச்சி தெரிவித்தார்

தன்னம்பிக்கையும், தைரியமும், உடல் வலுவும் இருந்தால் போதும் காவல் துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பெண்கள் வியத்தகு உயரங்களை எட்ட இயலும்.


Advertisement
தமிழ் திரைப்படங்களில் கலப்படத் தமிழ், ஆங்கில ஆதிக்கம் - ராமதாஸ்
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணியின் சூட்கேஸ் திருட்டு... 2 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து 14 சவரன் நகைகள் மீட்பு..!
சென்னை அம்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலி
மதுபோதையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ளே அனுமதிக்குமாறு ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்..!
பிறந்த குழந்தையை உடனடியாக உறவினருக்கு காண்பிக்கும் புதிய வசதி.. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறிமுகம்..!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு நாள் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி..!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி. கங்காபூர்வாலா பதவியேற்பு...!
வந்தே பாரத் - இந்திய ரயில்வேயின் பெருமை.. இரும்பு ரயிலாக மாறும் கதை..!
3 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை ரத்து செய்ய தேசிய மருத்துவ ஆணையம் முடிவு..!
தொலைபேசி மூலம் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக காவல்நிலையத்தில் எஸ்.வி சேகர் புகார்..!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement