கூட்டணி என்ற நிலைப்பாட்டில், அதிமுக தான் என்ஜின் என்றும் மற்ற கட்சிகள் பெட்டிகளே என்றும் கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், என்ஜினோடு எந்த பெட்டியை சேர்க்க வேண்டும், நீக்க வேண்டும் என்பது, தங்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுகவுக்கு என்று தனித்தன்மை உள்ளது என்றும், குட்டக் குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல என்றும் கூறினார்.