செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

10 வருடம் கழித்து ஒரு ஹிட்டு கொடுத்த சசிக்கு வந்த சோதனை..! அயோத்தி பட கதை திருட்டாம்.?

Mar 18, 2023 07:51:54 AM

சசிக்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் அயோத்தி படத்தின் கதை சிங்கப்பூர் சரவணன் என்ற தனது நாவலை தழுவி படமாக்கப்பட்டிருப்பதாக கூறி நாவலாசிரியர் மில்லத் அகமது குற்றம்சாட்டியுள்ளார்.

குட்டிப்புலிக்கு அப்புறம் பாலுமகேந்திராவுக்காக தலைமுறைகள் என்ற படத்தை தயாரித்து வழுக்கிய சசிக்குமார், பாலாவின் தாரைதப்பட்டையால் பெரும் கடனாளியானார்.

அந்த கடன்களை அடைக்க கதாநாயகன், கவுரவ வேடம், குணச்சித்திர நடிகர் என்று 21 படங்கள் நடித்த சசிக்குமாரின் திரை வாழ்க்கையில் 10 வருடங்கள் கழித்து அண்மையில் வெளியான அயோத்தி திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சாதி மதம் என பிரிந்து கிடப்பதை தவிர்த்து சகமனிதனையும் நேசிக்க சொல்லும் அற்புதமான கதையை கொண்ட திரைப்படம் என்று பாராட்டப்பட்ட அயோத்தி திரைப்படத்தின் கதை, தனது சிங்கப்பூர் சரவணன் என்ற நாவலை தழுவி படமாக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய நாவலாசிரியர் மில்லத் அகமது, இது குறித்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனிடம் தொலைபேசி மூலம் முறையிட்டதாகவும் ஆனால் அவர் தனது செல்போன் இணைப்பை பாதியில் துண்டித்து விட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.

அயோத்திப் படத்தை மந்திரமூர்த்தி எழுதி இயக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில் படக்குழு உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், திரைப்படம் எனது நாவலை தழுவி எடுக்கப்பட்டு இருப்பதால், அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழ் சினிமாவில் கதை திருட்டு என்பது சர்வசாதாரணமாகி விட்டதாக, சினிமா விமர்சகர்கள் மத்தியில் பரவலாக பேச்சு உள்ள நிலையில், ஹிட்டான அயோத்தி படத்தின் இயக்குனர் மீதும் இதே பழி விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்...! வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணி செய்ய மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தல்
இளம்பெண்கள் பிக்பாசிலும், கைபேசியிலும், காதலிலும் நம்பி மூழ்கி ஏமாறக்கூடாது- ராதிகா சரத்குமார்
மாமன்னன் படத்தின் உதவி இயக்குநர் மாரிமுத்து மூச்சுத்திணறலால் 30 வயதில் உயிரிழப்பு..!
வனிதா தாக்கப்பட்டார்! ஓங்கி அறைந்ததால் கன்னம் பழுத்தது..! எக்ஸ் தளத்தில் குமுறல்
கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
நடிகர் மன்சூர் அலிகான் தமக்கு தெரிந்து யார் மனதையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார் - சீமான்
திரைப்படத்துறையினர் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா டிச 23 ,24 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல், அஜித், விஜயக்கு அழைப்பு
பருத்தி வீரன் படத்தில் இயக்குநர் அமீர் முதல் படம் என்பதால் கோடி கணக்கில் ஏமாற்றி விட்டதாக ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு
மன்னிப்புல்லாம் கேட்க முடியாது எரிமலையாக குமுறப்போவதாக நடிகர் சங்கத்திற்கு மன்சூர் மிரட்டல்..! திரிஷாவுக்கு மாப்பிள்ளையாம் இவரு..!
திரிஷாவ அப்படியே தூக்கி.. மன்சூர் அலிகானின் வக்கிர பேச்சு.. நடிகைகள் கடும் கண்டனம்..! நடிகர் சங்கம் தூங்குகிறதா ?

Advertisement
Posted Dec 08, 2023 in சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்

Posted Dec 08, 2023 in இந்தியா,Big Stories,

தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்

Posted Dec 08, 2023 in வீடியோ,செய்திகள்,சென்னை,Big Stories,

வெள்ளச்சேரியான வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ வை கேள்விகளால் விளாசிய பெண்..! கொடுத்தாரு பாரு ஒரு விளக்கம்..

Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...


Advertisement