ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
டெல்லியிலுள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களும், இந்திய அணி 262 ரன்களும் எடுத்தன.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஜடேஜா, அஸ்வினின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
115 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய இந்தியா, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 118 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.