செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
ஆன்மீகம்

தைப்பூசத் திருவிழா : விழாக்கோலம் பூண்ட முருகன் கோவில்கள்..!

Feb 05, 2023 03:09:56 PM

தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்துள்ளனர்.

தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முதன்மையானது தைப்பூசம்... 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவதாக விளங்கும் பூச நட்சத்திரம், தைமாதத்தில் வரும்போது அதனை தைப்பூசமாகக் கொண்டாடுகின்றனர்.

ஆண்டுதோறும் நிறைமதி நாளில் வரும் இந்த நன்நாளில்தான் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிக்கு ஆயிரக்கணக்கில் பாதயாத்திரை வருகின்றனர். மயில் காவடி, மச்சக்காவடி, பால்காவடி, பறவைக்காவடி, தீர்த்தக்காவடி ஏந்திய பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதனைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.


Advertisement
அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர் திருவிழா.. திருத்தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!
இது நடை பாதையா..? இல்லை தீ மிதி மேடையா..? கால் வைக்க முடியாமல் தலை தெறித்து ஓடும் பக்தர்கள்..!
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!
மதுரையே அதிர வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... கோவிந்தா..கோவிந்தா என முழக்கமிட்டு பக்தர்கள் பக்தி பரவசம்
அட்சய திருதியை முன்னிட்டு யமுனோத்ரி கோயிலில் வீதியுலாவின் போது ஹெலிகாப்டர் மூலம் மலர்களை தூவி வழிபாடு
ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை..!
தமிழ் புத்தாண்டு... கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் அருகே சாட்டையடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்
மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்கள் வீதியுலா.. சிவதாண்டவ நடனமாடி கபாலீஸ்வரரை வரவேற்ற சிவனடியார்கள்
மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!

Advertisement
Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

அலுமினிய பாத்திரத்திற்குள் வசமாக சிக்கிய குழந்தை..! இரண்டரை வயது குழந்தையின் ஒரு மணி நேர போராட்டம்..!!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

விபத்துக்குப் பின் நேற்றிரவு முதல் சரக்கு ரயில் இயக்கம்.. இன்று முதல் பயணிகள் ரயில் சேவைக்கு திட்டம்.!

Posted Jun 05, 2023 in இந்தியா,வீடியோ,Big Stories,

275 பேரை பலி கொண்ட கோர விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!

Posted Jun 05, 2023 in சினிமா,வீடியோ,Big Stories,

தேகம் மறைந்தாலும் இசையாய் வாழும் எஸ்.பி.பி... இசையுலகின் முடிசூடா மன்னன்..!

Posted Jun 04, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எஸ்.எஸ்.ஐ வீட்டில் கைவரிசை... சினிமா பாணியில் விரட்டிச்சென்று கைது செய்த போலீசார்


Advertisement