திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்களிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்செந்தூர் கோயிலில் சாமி கும்பிட சென்ற தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த மல்லிகாவின் மூன்று சவரன் தங்க நகையை கூட்டத்தில் திருடிச் சென்றுவிட்டனர். இதேபோன்று நாங்குநேரி வானமாமலை, இடச்சிவிளை முத்துக்குமார் ஆகியோரது 10 கிராம் தங்க செயின்களும் களவாடப்பட்டன.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்த போலீசார் திருநெல்வேலி குமரேசன் நகரை சேர்ந்த பேச்சியம்மாள் மற்றும் கலா ஆகியோரை கைது செய்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். கோவிலுக்கு நகை அணிந்து வருவோர் எச்சரிக்கையுடன் சாமிதரிசனம் செய்ய போலீசார் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.