செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

திருமணமான பெண்ணுடன் லிவிங் டுகெதர் இருந்த இளைஞர் வெட்டிக் கொலை.. குழந்தையை தவிக்க விட்டதால் ஆத்திரம்..!

Feb 02, 2023 08:18:21 PM

சென்னை புழல் அருகே காதலியுடன் பைக்கில் சென்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவனை பிரிந்து முன்னாள் காதலனை தேடிச்சென்ற பெண்ணால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்தச் சம்பவம்

சென்னை அருகே புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதாசந்தர். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.

கடந்த 31ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ராகவி என்ற பெண்னுடன் சென்ற போது வில்லிவாக்கம் சாலையில் ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சுதாசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு ஆட்டோவில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.

இந்த கொலை சம்பவம் குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

ராகவியும், சுதாசந்தரும் காதலித்து வந்த நிலையில் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராகவியின் பெற்றோர் 2 வருடங்களுக்கு முன்பு அவரை ஆவடி அடுத்த வெள்ளச்சேரியை சேர்ந்த வசந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ராகவிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், சுதாசந்தருடனான காதலை செல்போனில் தொடர்ந்து வந்ததால், கணவனுடன் அடிக்கடி சண்டியிட்டு வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கணவனை பிரிந்த ராகவி, தனது குழந்தையை கணவன் வீட்டில் தவிக்க விட்டு, சிங்கிளாக தாய் வீட்டிற்கு திரும்பி உள்ளார். தாய் வீட்டில் தங்காத ராகவி, காதலன் சுதாசந்தருடன் வினாயகபுரம் பகுதியில் தனி வீடு எடுத்து லிவிங் டுகெதராக வசித்து வந்துள்ளார்.

ராகவியின் நடவடிக்கை வெள்ளச்சேரி பகுதியில் வசித்து வரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு கடும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகவியை மீண்டும் வீட்டிற்கு திரும்ப வர வைப்பதறகாக அவரது உறவினர்கள் சேர்ந்து காதலன் சுதாசந்தரை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராகவியின் அண்ணண் வெள்ளச்சேரியை சேர்ந்த ராபின் என்கிற பரத், சுஷ்மிதா, ராகவியின் சித்தப்பா உதயராஜ் , ஒரகடம் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ஆகியோரை கைது செய்ததோடு இரண்டு பட்டாக்கத்திகளையும், தப்பிச்செல்ல பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவனை பிரிந்து முன்னாள் காதலனை தேடிச்சென்ற ராகவியால் இந்த கொலை நடந்திருப்பதால் அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நாளை ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை..!
ஏப்.8-ஆம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்
தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை.. காவல் நிலையத்திற்கு மாதா மாதம் மாமூல்..!
70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி கட்டி போட்டு 20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை
12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த அண்ணா நகர் டவர் பூங்கா..!
முதல் அமைச்சர் பாதுகாப்பு பணிக்காக, சஃபாரி போட்ட கமாண்டோ பெண் சிங்கங்கள்..!
குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதி என்ன? - இபிஎஸ்
தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - நிதித்துறை செயலாளர் முருகானந்தம்
30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண் பரிதாப பலி..! அதிவேக காரால் சகோதரரும் உயிரிழந்தார்

Advertisement
Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆசிரியரை விரட்டி விரட்டி வெளுத்த மாணவனின் தந்தை தாய், தாத்தா அதிரடி கைது..! சிறுவனை தாக்கியதால் திருப்பி அடித்தனர்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,Big Stories,

கல்லூரிக்கு சென்ற மாணவியை காதலித்து மணந்த இளைஞரை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்..! ஆட்டை பலி கொடுப்பது போல வெறிச்செயல்

Posted Mar 21, 2023 in சென்னை,Big Stories,

70 வயது பெண்ணை நிர்வாணப்படுத்திய கொடூர கொள்ளையர்கள்..! இல்லத்தரசிகளே உஷார்

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,சற்றுமுன்,வீடியோ,Big Stories,

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தாக்கல்..!

Posted Mar 21, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லவ்தீக வாழ்க்கையால் ஜெயிலில் கம்பி எண்ணும் பாவமன்னிப்பு பாதிரியார்..! ல்தகா சைஆவால் சீரழிந்ததாக தகவல்


Advertisement