முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து இன்னும் அனுமதி பெறவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனா நினைவுச்சின்னம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் மட்டுமே நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மாநில அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கலான பிறகே, மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.