விழுப்புரம் அருகே கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவாமத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கூட்ட நெரிசலில் தொரைப்பாடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸ் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த செயினை 3 பெண்கள் சேர்ந்து அறுக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.