உணவகம் ஒன்றில் உணவு பரிமாறும் வெயிட்டர் ஒருவர், ஒரே நேரத்தில் 16 தட்டுகளில் வாடிக்கையாளர்களுக்கு தோசை பரிமாறும் காட்சி இணையத்தில் பரவலாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோவை வெளியிட்ட தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்தால் இவர் தங்கம் வெல்வது நிச்சயம் என்று பாராட்டி உள்ளார். ஒரே நாளில் சுமார் 15 லட்சம் பேர் இந்த வீடியோ காட்சியைப் பார்த்து ரசித்தனர்.
பல்வேறு நெட்டிசன்களும் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். கடவுள் அவருக்கு இன்னும் நீளமான கைகளை தந்து இருக்கலாம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.