மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயிலில் நடைபெற்ற 88வது பிரியாணி திருவிழாவில் 200 ஆடுகள், 300 சேவல்கள் பலியிடப்பட்டு 2 ஆயிரத்து ஐநூறு கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட பிரியாணி, கிராமமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பிரியாணி திருவிழா நேற்று நடைபெற்ற நிலையில் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 25க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
விழாவின் நிறைவாக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் சேவல்கள் முனிய சுவாமிக்கு பலியிடப்பட்டு பிரியாணி சமைக்கப்பட்டு, அன்னதானமாக வழங்கப்படுவது ஆண்டாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.