சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கவும், பிற்படுத்தப்பட்டோர் நலனிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், மத்திய அரசு செயலாற்றி வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற பகவான் தேவநாராயணனின் அவதார விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் திரண்டிருந்த ஏராளமானோரை நோக்கி பிரதமர் கையசைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உடைக்க பல சதி முயற்சிகள் நடைபெற்ற நிலையில், எந்த சக்தியாலும் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை என்றார்.
முன்னதாக, பில்வாராவிலுள்ள கோவிலில், தீபாராதனை காட்டி பிரதமர் மோடி வழிபட்டார்.