சேலம் மாவட்டம் எடப்பாடியில் சர்வீஸ் சாலையில் சென்ற அமைச்சர் உதயநிதியின் கான்வாய்க்குள் நீண்ட கம்பிகளுடன் திடீரென புகுந்த சரக்கு வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு வாகன ஓட்டுனர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு..
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு அமைச்சர் உதயநிதி வெள்ளிக்கிழமை மாலை எடப்பாடி வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். சர்வீஸ் சாலையில் முன்பக்கம் பாதுகாப்பு வாகனங்கள் செல்ல அமைச்சர் உதய நிதியின் வாகனத்தை பின் தொடர்ந்து மற்ற அமைச்சர்களின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தது.
அப்போது விரைவுச்சாலையில் போக்குவரத்து விதியை மீறி நீண்ட கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு வாகனம் ஒன்று திடீரென சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அமைச்சரின் காண்வாய்க்குள் புகுந்தது.
சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை பிரேக் அடித்தும் வேறு திசையில் திருப்பியும் வாகனங்கள் ஒண்ரோடொன்று மோதாமல் சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
உடனடியாக அந்த சரக்கு வாகனம் ஓரங்கட்டப்பட்ட நிலையில் அமைச்சர் உதய நிதியின் காண்வாய் தடையின்றி அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் கல்வாய்க்குள் கம்பியுடன் புகுந்த சரக்கு வாகன ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.