தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் பத்து கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற நிலையில், ஐஸ்கிரீம் கடையில் நுழைந்த நபர் சாவகாசமாக அமர்ந்து கல்லாப்பெட்டியில் இருந்து பணத்தை திருடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு பொம்மிடியில் உள்ள ஐஸ்கிரீம் கடை, கணினி மையம், மளிகைக்கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பத்து கடைகளுக்குள் நுழைந்த மர்ம நபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் புகார் அளித்த நிலையில், கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், ஒரே நபர் எல்லா கடைகளிலும் திருடியது தெரியவந்துள்ளது.
சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து திருடனை போலீசார் தேடி வரும் நிலையில், முகத்தை மறைத்தபடி கடைக்குள் நுழைந்த அந்த நபர், அங்கிருந்த சிசிடிவி கேமராவை திருப்ப முயற்சித்த காட்சி வெளியாகியுள்ளது.