அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் மெம்பிஸ் நகரில், போலீசார் கடுமையாக தாக்கியதில், கருப்பினத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பான வீடியோ காட்சிகள் பகிரப்பட்டுள்ளன.
கடந்த 7 ஆம் தேதி, மெம்பிஸ் நகரில், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக கூறி டயர் நிக்கோலஸ் என்பவரை, 5 போலீசார் கடுமையாக தாக்கினர்.
படுகாயமடைந்த நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 10-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், கருப்பினத்தை சேர்ந்த 5 பேர் மீதும் மோசமான தாக்குதல், தவறான நடத்தை உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
போலீசாரின் தாக்குதலை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நிக்கோலஸ் இறப்புக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.