தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகை ஜமுனா, வயது மூப்பால் ஐதராபாத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.
1953ம் ஆண்டு புட்டிலு என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமான நடிகை ஜமுனா, தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தி படங்கள் உட்பட 198 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிஸ்ஸியம்மா, குழந்தையும் தெய்வமும் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
பிலிம் பேர் உட்பட பல விருதுகளை வென்ற அவர், சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்தார். கடந்த 1989ம் ஆண்டு ராஜமுந்திரி தொகுதியில் மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு அரசியலில் இருந்து விலகினாலும் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து வந்தார்.