நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணி, தொடரையும் முழுமையாக கைப்பற்றியது.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 385 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா, சுப்மன் கில் ஆகியோர் சதமடித்தனர்.
கடின இலக்குடன் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 42ஆவது ஓவரில் 295 ரன்கள் மட்டும் எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.
ஏற்கனவே டி20 தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா, இந்த தொடரில் பெற்ற வெற்றியின் மூலம், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையிலும் முதலிடம் பிடித்தது.