தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்.
தமிழ் சினிமாவில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ.ராமதாஸ், சுயம்வரம், ராஜா-ராஜா தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார்.
மேலும், ஏராளமான திரைப்படங்களுக்கு கதாசிரியராகவும், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் மாரி, உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
சென்னையில் குடும்பத்தினருடன் வசித்துவந்த ராமதாஸ், வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.