ஈராக்கில், Gulf கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி நடைபெற உள்ள பஸ்ரா சர்வதேச அரங்கிற்குள் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சுவரேறி குதித்து நுழைந்தனர்.
அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக ஈராக்கில் Gulf கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றுவருகிறது.
ஈராக் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால் உற்சாக மிகுதியிலிருந்த ரசிகர்கள், சுவரேறி குதித்து அரங்கிற்குள் செல்லமுயன்றனர்.