தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் குறித்த விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதிகள், அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.