கல்வி பயில வெளிநாடுகளுக்குச்செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு ஆண்டு அதிகரித்துள்ளது.
நவம்பர் 30-ம் தேதி வரை, 6 லட்சத்து 48 ஆயிரத்து 678 மாணவர்கள் கல்வி பயில ஸ்டூடண்ட் விசாவில் வெளிநாடுகளுக்குச்சென்றுள்ளனர். இது, கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னர் இருந்ததைவிட, அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வணிகம், வேலைவாய்ப்பு, மருத்துவம், யாத்திரை மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிநாடு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை, தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளைவிட குறைவாகவே உள்ளது.
நடப்பு ஆண்டு கனடா மற்றும் இங்கிலாந்திற்கு இந்தியர்கள் அதிக பேர் சென்றுள்ளனர்.