பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி மன்னர் சார்லஸை லண்டனில் உள்ள பக்கிம்ஹாம் அரண்மனையில் நேரில் சந்தித்தார்.
பக்கிம்ஹாம் அரண்மனைக்கு சென்ற விக்ரம் துரைசாமி மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் குதிரை பூட்டப்பட்ட வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டனர்.
இந்த சந்திப்பின்போது துணை தூதர் சுஜித் கோஷ் மற்றும் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர். ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற முதல் தூதர் விக்ரம் துரைசாமி.