அமெரிக்காவில் உள்ள அர்கான்சஸ் மாகாணத்தில் உள்ள இயர்லே நகர மேயர் தேர்தலில் 18 வயது நிறைந்த கல்லூரி மாணவர் ஜெய்லன் ஸ்மித் என்பவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட நெமி மாத்யூஸ் தோல்வியை தழுவினார்.
மேயர் பணியை செய்து கொண்டே அர்கான்சஸ் பல்கலைகழகத்தில் தமது கல்வியையும் தொடர முடிவு செய்து இருப்பதாக கூறியுள்ளார்.