இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், ஓட்டுநர் செல்ஃபி எடுத்தபடி அரசு பேருந்தை இயக்குவது போல் வீடியோ வெளியான நிலையில், பேருந்தில் தொங்கியபடி செல்வதையே வழக்கமாகக் கொண்ட மாணவர்களை வீடியோ எடுத்து வெளியிட்டதால், பழிவாங்கும் நடவடிக்கையாக, மாணவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதாக பேருந்து ஓட்டுநர் விளக்கம் அளித்துள்ளார்.
தான் செல்ஃபி எடுக்கவில்லை எனவும், பேருந்தில் தொங்கியபடியும், ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த மாணவர்களை வீடியோ எடுத்ததாக ஓட்டுநர் தேவபிரபு கூறியுள்ளார்.