நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, மூதாட்டியைக் கொன்ற மக்னா யானை 18 நாட்களுக்குப் பின் பிடிபட்டது.
60க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய இந்த PM2 மக்னா யானையை வனத்துறையினர் டிரோன் மூலம் தேடிவந்தனர்.
18 நாட்களாக போக்கு காட்டி வந்த இந்த மக்னா யானை புளியம்பாறை வனப்பகுதியில் இருப்பது தெரியவந்ததும், வனத்துறையினர் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். முதுமலை வனப்பகுதியில் இந்த யானை விடப்பட ஊள்ளது.