இமாச்சலில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ், பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில் பிற்பகலுக்குப் பின் நிலைமை மாறியது.
பாஜகவுக்கு 25 தொகுதிகளே கிடைத்துள்ள நிலையில், சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்று உள்ளனர். ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை.
செராஜ் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் வெற்றிபெற்ற போதும், தேர்தலில் பாஜக தோற்றதால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.