இந்தியாவை விட ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் நாடுகள் 6 மடங்கு அதிக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்னலெனா பேர்போக்கை, ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்தார்.
இருதரப்பு உறவுகள், உக்ரைன் மோதல், இந்தோ - பசிபிக் பிராந்திய விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் பேசிய ஜெய்சங்கர், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் 12 முதல் 13 பில்லியன் டாலர் அளவு தான் என்றும், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவானது என்றும் கூறினார்.