மெர்செடிஸ் பென்ஸ் நிறுவனம் தமது இ.கியூ.பி. ரக மின்சாரக்காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
74 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் அறிமுகப்படுத்தபட்ட அந்த கார், ஏற்கனவே வெளியான ஜி.எல்.பி. ரக காரைப்போல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, மெர்செடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இ.கியூ.பி. ரக கார், 8 விநாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. 66 புள்ளி 5 கிலோ வாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரியின் மூலம், அந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 423 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என்றும் மெர்செடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 100 கிலோ வாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், 10 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை 32 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.