தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்திற்கு திமுகவினரே உதவுவதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப்பொருட்கள் கிடைக்கும் அளவிற்கு.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை உள்ளதாக குறை கூறியுள்ளார். மேலும், ராமநாதபுரம் கீழக்கரையில் 360 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்றதாக திமுக நிர்வாகி பிடிபட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது அடுத்த பேச்சின்போது இதனையும் குறிப்பிடுவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.