பெரம்பூர் அருகே, ஓடும் பேருந்தில் ஏறியதை நடத்துனர் கண்டித்ததால், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பயணிக்கும் நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
42 தட எண் கொண்ட மாநகர பேருந்து, இன்று காலை பெரம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்ற போது ஓடும் பேருந்தில் ஏறிய பெண் பயணியை நடத்துனர் கண்டித்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதில் பெண் பயணி நடத்துனரை ஆபாசமாகப் பேசி, கையால் தாக்கியுள்ளார். இதனால் பொறுமையிழந்த நடத்துனர் பதிலுக்கு பெண் பயணியை தாக்கி கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.
இந்த பிரச்சனையால் பேருந்து சிறிது நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்ட நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.